உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளல்
இளைஞர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் வழங்கும் பின்னூட்டங்கள் எங்களுக்குப் பெறுமதியானவை. அவை உங்கள் தேவைகளையும், நாங்கள் சிறப்பாகச் செய்பவற்றையும், நாம் மேம்படுத்த வேண்டியவற்றை அறிய எங்களுக்கு உதவும்.
பின்வரும் வழிகளில் நீங்கள் பின்னூட்டங்களை வழங்கலாம்:
ஒரு ஊழியருடன் பேசுதல்
உங்களை அல்லது உங்கள் பிள்ளையை பராமரிக்கும் ஊழியர்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குழந்தை மற்றும் குடும்ப தொடர்பு சேவைக்கு வருகை தாருங்கள்
ரொனால்ட் மெக்டொனால்ட் குடும்ப அறை
தரைமாடி, பேர்த் சிறுவர் மருத்துவமனை
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை திறந்திருக்கும்
அழையுங்கள்: 08 6456 0032
மின்னஞ்சல்: cahsfeedback@health.wa.gov.au
பின்னூட்டல் படிவம்
ஒரு பின்னூட்டல் படிவத்தை பூர்த்தி செய்ய 2 வழிகள் உள்ளன:
- ஒரு படிவத்தை நிரப்பி பேர்த் சிறுவர் மருத்துவமனையில் உள்ள தகவல் மேசையில் உள்ள பின்னூட்டல் பெட்டியில் போடுதல்
- www.cahs.health.wa.gov.au க்குச் சென்று படிவத்தை ஆன்லைனில் நிரப்புதல்.
கெயார் ஒபீனியன்
careopinion.org.au என்ற கெயார் ஒபீனியன் இணையதளத்தில் உங்கள் கதையை அநாமதேயமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்
MySay கருத்துக் கணிப்பு
உங்கள் சந்திப்புக்குப் பிறகு உங்கள் மொபைல் ஃபோனுக்கு அனுப்பப்படும் கருத்துக் கணிப்பைப் பூர்த்தி செய்யுங்கள்.
உங்கள் தகவல்கள் பகிரப்படுவது பரவாயில்லை என்று நீங்கள் கூறாவிட்டால் உங்கள் தகவல் மற்றவர்களுடன் பகிரப்படமாட்டாது. பின்னூட்டம் வழங்குவது எதிர்காலத்தில் நாங்கள் வழங்கும் பராமரிப்பை மேம்படுத்த உதவும்.